அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த 24/7 தீ ஜெபஅரண் எந்த வகையில் தற்போதுள்ளதுடன் மாறுபடுகிறது? இது தற்போதுள்ள பிரார்த்தனை வலையமைப்புகளுடன் முரண்படும் மற்றொரு பிரார்த்தனை முயற்சியா?

  • இந்தத் தீ ஜெபஅரண் தற்போதுள்ள எந்தவொரு பிரார்த்தனை முயற்சியையும் மாற்றுவதற்காக அல்ல. மாறாகத் தற்போதுள்ள வெவ்வேறு பிரார்த்தனை வலையமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாகும்.
  • இந்தத் தீ ஜெபஅரண் மற்றொரு பிரார்த்தனை யோசனை அல்ல. மாறாக, இந்த ஆண்டுகளில் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றிய கருத்தை உருவாக்குகிறது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்த விசுவாசமுள்ள பல ஜெப முயற்சிகளுக்கு இறைவன் அளித்த பதில்.
  • கிறிஸ்துவின் சரீரம் உடன்படிக்கைக்கு வரும் வரை, எந்தவொரு சபைக்கும் அல்லது பிரார்த்தனை வலையமைப்பிற்கும் மலேசியாவின் மீது பலமானவரைப் பிணைக்க அதிகாரம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
  • இம்முயற்சி திருச்சபை தலைமைத்துவம் மற்றும் பிரார்த்தனை வலையமைப்பின் பிதாக்களையும் கணம் பண்ணுகிறது. உண்மையில், இவ்வலையமைப்பில் சேரும் ஒவ்வொரு நபரும் தங்கள் போதகர் மற்றும் பிரார்த்தனைத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும்; அவர்களின் செயலுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

பிரார்த்தனை குறிப்புகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படும்?

இந்த தீ ஜெபஅரண் வலையமைப்புச் செயற்பாட்டில் உள்ள ஒரு புதிய பிறப்பாகும்.

படிநிலை 1- தொடக்க நிலை (3 மாதங்கள், மார்ச்-மே 2021 – ஜெபம், கேட்டல், திட்டமிடுதல் மற்றும் மாற்றியமைத்தல்)

  • எங்களுள் சிலர் தன்னார்வத்துடன் ஒவ்வொரு வாரமும் ஒன்று கூடி ஜெபிக்கவும், பிரார்த்தனையைத் திட்டமிடவும்; முதல் 3 மாதங்களுக்கு இதைச் செயற்படுத்தவும் முன்வந்தோம்.
  • தற்காலத்திற்கு ஒவ்வொரு வாரமும் முக்கிய கவனம் செலுத்துவதற்கான பிரார்த்தனைக் குறிப்புகளின் தொகுப்பைத் தெரிவு செய்துள்ளோம். முக்கியமாக ஒவ்வொரு வாரமும் அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்
  • ஒவ்வொரு மாதமும் வலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைவருடனும் புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்
  • 3 மாதங்கள் கழித்து (மே மாத இறுதியில்) மதிப்பாய்வு செய்யப்படும்.

படிநிலை 2: எங்களுக்குத் தெரியாது யோசுவா 3:4

அடுத்த கட்டத்தை இயக்க பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

நம்முடைய சொந்த ஜெப நேரத்தில் நாம் ஏற்கனவே பயன்படுத்தும் ஜெபங்களைப் பற்றிய நிலை என்ன?

  • இந்தத் தீ ஜெபஅரண் உங்கள் தனிப்பட்ட பிரார்த்தனை நேரத்தையும் உங்களின் வேதாகமத்தை வாசிப்பையும் மாற்றாது. இது மேற்குறிப்பிட்டவற்றிற்குக் கூடுதல் ஒன்றாகும்.
  • இத்தீ ஜெபஅரண் உங்கள் வலையமைப்புப் பிரார்த்தனை மற்றும் சபையின் பிரார்த்தனைகளுக்கான மாற்றல்ல.
  • இது மலேசியாவில் உள்ள கிறிஸ்துவின் சரீரத்தில் சேர உங்களை அழைக்கிறது. இதன்வழி இப்போதுள்ள நேரத்தை கூட்டுகிறீர்கள். இது தீ ஜெபஅரணில் உங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஒரு சேர ஏற்றுக் கொண்ட உடன்பாட்டு அடிப்படையில் ஒற்றுமையாக கர்த்தரிடம் வேண்டுதல்.

ஏன் 15 நிமிடங்கள் மட்டுமே?

  • புதியவர்களை ஊக்குவிக்கவும், ஜெபிக்க கற்றுக்கொள்ளவும். ஜெபங்களை எவரும் பயன்படுத்தவும், பரிசுத்த ஆவியானவர் அவற்றை மேலும் ஜெபத்தில் கொண்டு செல்லவும் பிரார்த்தனைகள் தட்டச்சு செய்யப்பட்டுள்ளன.
  • 15 நிமிடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச நேரமாகும்; அதிகபட்சம் அல்ல.
  • 15 நிமிடங்களுக்கு மேல் ஜெபிக்கலாம். எ.கா: இரு 15 நிமிட ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு 30 நிமிட நேரத்தைத் தெரிவு செய்யலாம்.
  • பரிந்துரையாளர்கள் 1 மணிநேரம் அல்லது அதற்கு மேல் உள்நுழைய விரும்பலாம்.

தீ ஜெபஅரண் எவ்வளவு காலம் நீடிக்கும் - நாம் எப்போது முடிப்பது?

  • இது ஒரு நெருக்கடிக்கான ஒரு துலங்கல் (பதில்) அல்ல. ஆனால், இது இந்நேரத்தில் மலேசியாவில் உள்ள அவரது சபைகளுக்குக் கர்த்தரின் அழைப்பிற்கான துலங்கலாகும்.
  • நெருக்கடி முடியும் போது இதுவும் முடியாது. நம் தேசத்தில் நம்முடைய உறுதியான நிலைப்பாட்டை எடுத்து மலேசியாவிற்காக ஜெபிப்பது நீண்டகால உறுதிப்பாடாகும். மலேசியாவிற்குக் கர்த்தரின் ராஜ்யம் வரும் வரையிலும், அவருடைய நோக்கம் நம் தேசத்தில் நிறைவேறும் வரை இந்த ஜெபம் தொடரும்.

விரும்புகிற எதிர்பார்க்கும் விளைவு என்ன?

  • திருச்சபைகளுக்கிடையே ஒற்றுமை; ஒருவருக்கொருவர் சபைகளுக்காக ஜெபித்தல்; சகோதரத்துவ பிணைப்பை உருவாக்குதல்; திருச்சபையின் அளவு, இனம் முதலியவற்றை எண்ணாமல் ஒருவருக்கொருவர் கணம்பண்ணுதல்.
  • இதுவே கர்த்தரின் ஆசீர்வாதத்தைக் கட்டளையிடும். இந்தத் தீ ஜெபஅரண் வழி திருச்சபைகள் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்து நடைமுறையில் உதவவும் பிரார்த்தனை செய்யவும் முடியும்.
  • ஒவ்வொரு நகரத்திற்கும் மாநிலத்திற்கும் 24/7 தீ ஜெபஅரண் அட்டவணை உண்டு. அது குறிப்பிட்ட அந்த நகரம்,மாநிலம் அல்லது பிராந்தியத்தின் ஆன்மீக விளைவுகளைப் பாதிக்கக்கூடிய காரியங்களுக்காக மாநிலத்திற்குள் பிரார்த்தனை செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
  • நமது எல்லா தேவாலயங்களிலும் பிரார்த்தனை பலிபீடங்களின் எழுச்சி. இது 15 நிமிடங்கள் மட்டுமே என்பதால் யாரும் ஜெபிக்க கற்றுக்கொள்ளலாம்.
  • இதன் ஒரு பகுதியாகக் குடும்ப பலிபீடங்களும் பணியிட பலிபீடங்களும் அமைக்கப்படும்.

எப்படிச் செயல்படுத்துவது?

சரீரம்
  • நீங்கள் நிர்ணயம் செய்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் – வீடு, மதிய உணவின் போது,பணியிடம், பள்ளி / பல்கலைக்கழக வளாகம், வாகனம் ஓட்டுதல், அமைதியான இடம்
  • உங்கள் பிரார்த்தனைக் குழுவை எங்கும் சந்தித்து, பிரார்த்தனை செய்யலாம். எ.கா. உங்கள் தேவாலயம் / ஜெபகுழு / தேசிய பிரார்த்தனை பலிபீடம் (பீஸ்ஹேவனில்)

நிகழ்நிலை

  • திருச்சபைகளும் பிரார்த்தனைக் குழுக்களும் தாங்கள் உறுதிபடுத்திய நேரத்தில் கூட்டாக ஜெபிக்க உள்நுழையலாம்
  • தனிநபர்கள் 15 நிமிட பகுதியில் உள்நுழைந்து ஜெபிக்கலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட நேர பகுதியைத் தெரிவுசெய்யலாம்.
  • உங்கள் போதகர்களிடம் நாம் 24/7 தீ ஜெபஅரண் ஜெபத்தில் அவர்களை மறைக்கிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

வலைத்தளத்திற்கான எனது கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது?

படி 1:

உள்நுழைக பக்கத்தில் உள்ள “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா” பொத்தானைக் கிளிக் செய்க.

 

படி 2:

நீங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரியில் விசை மற்றும் “சமர்ப்பித்தல்” பொத்தானைக் கிளிக் செய்க. நீங்கள் பதிவுசெய்த மின்னஞ்சலை நீங்கள் மறந்துவிட்டால், தயவுசெய்து எங்களின் admin@malaysiaunitedfirewall.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இதன்மூலம் நாங்கள் உங்களுக்காகச் சரிபார்த்து உதவலாம்.

 

படி 3:

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலைத் திறந்து, உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்க.

பிரார்த்தனை பகுதியை நான் எவ்வாறு பதிவு செய்வது?

படி 1:

மெனுவில் உள்ள “பிரார்த்தனை கால அட்டவணை” பொத்தானைக் கிளிக் செய்க.

 

படி 2:

பிரார்த்தனை கால அட்டவணையின் மேலே அமைந்துள்ள “புதிய நேர பகுதியைப் பதிவுசெய்க” பொத்தானைக் கிளிக் செய்க.

 

படி 3:

நீங்கள் விரும்பிய பிரார்த்தனை இடம், நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை முன்பதிவு செய்ய விரும்பினால் “ஒதுக்கப்பட்ட பகுதியைச் சேர்” பொத்தானைக் கிளிக் செய்க. தேவைக்கேற்ப பல இடங்களை நீங்கள் தொடர்ந்து சேர்க்கலாம். உங்கள் பிரார்த்தனை “ஒதுக்கப்பட்ட பகுதியை (களை)ச் சேர்த்தவுடன், “முன்பதிவை உறுதிப்படுத்து” பொத்தானைக் கிளிக் செய்க.

 

படி 4:

இந்தச் செய்தியை நீங்கள் பார்த்தவுடன், உங்கள் பிரார்த்தனை நேரப் பகுதி (கள்) பிரார்த்தனை கால அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது / சேர்க்கப்பட்டுள்ளன.

பிரார்த்தனை செய்ய நான் இணையதளத்தில் உள்நுழைய வேண்டுமா?

அனைத்துப் பிரார்த்தனைகள் மற்றும் ஏதேனும் புதுப்பிப்புகள் / அறிவிப்புகள் இணையதளத்தில் கிடைக்கப்பெறும் என்பதால் பிரார்த்தனை செய்ய இணையதளத்தில் உள்நுழைய உங்களை ஊக்குவிக்கிறோம்.

நாங்கள் ஒரு பதிவையும் உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் உங்கள் “ஒதுக்கப்பட்ட பகுதி நேரத்தில்” நீங்கள் ஜெபித்தீர்கள் என்பதைக் குறிக்கலாம். நீங்கள் ஜெபித்ததை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்த கட்டளைகள் கீழே தரப்பட்டுள்ளன.

படி 1:

ஒவ்வொரு வார ஜெபத்தின் முடிவிலும் “நீங்கள் ஜெபித்த பதிவு” பொத்தான் இருக்கும். நீங்கள் பிரார்த்தனை முடித்ததும், இந்தப் பொத்தானைக் கிளிக் செய்க.

படி 2:

உங்கள் பிரார்த்தனை “ஒதுக்கப்பட்ட பகுதி நேரம்” பக்கத்திற்கு நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். தொடர்புடைய பிரார்த்தனை ஒதுக்கப்பட்ட பகுதி நேரத்தில் “பிரார்த்தனை” பொத்தானைக் கிளிக் செய்க.

படி 3:

இங்கு “நீங்கள் ஜெபித்ததாக” செய்தியைப் பதிவு செய்துள்ளீர்கள் என்ற தகவலைக் காண்பீர்கள்.

 

படி 4:

மேலே உள்ள ’பாப்-அப்’ செய்தியை நீங்கள் மூடிவிட்டால், “பிரார்த்தனை பொத்தான்” இப்போது “நான் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பு வெளிப்படும்.

 

முக்கியமான குறிப்பு:

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பதிவு தானியிக்க முறையில் மீட்டமைக்கப்படும். இதன் பொருள் “நான் பிரார்த்தனை செய்தேன்” மீண்டும் கிளிக் செய்யக்கூடிய “பிரார்த்தனை” பொத்தானாக மாறும். இதன்மூலம் நீங்கள் வாரந்தோறும் ஜெபித்ததாகப் பதிவு செய்ய முடியும்.