NECF 40 நாள்கள் உபவாசப் பிரார்த்தனை

7 ஆகஸ்ட் – 15 செப்டம்பர் 2021

இந்த ஆண்டு 40 நாள்கள் தேசிய உபவாசப் பிரார்த்தனையில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்பதில் நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறோம்.

 

இந்த இணைய அகப்பக்கத்திலிருந்து (http://tiny.cc/40daysbooklet) NECF பிரார்த்தனை வழிகாட்டியை நாங்கள் பதிவிறக்கம் செய்துள்ளோம்.  நீங்கள் உங்கள் கைப்பேசியில் NECF பயன்பாட்டை (App) அணுகி, பிரார்த்தனை கையேட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 

நீங்கள் என்ன செய்ய முடியும்:

 

NECF பிரார்த்தனை கையேட்டில் தினசரி வழிபாடு, பைபிள் வாசிப்பு மற்றும் பிரார்த்தனை வழிகாட்டி உள்ளது.

 

நீங்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பின்பற்றலாம். அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த ஜெப அரண் நாள்களின் நேரங்களையும் தேர்வு செய்யலாம்.

 

நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை (உணவு) உபவாசம் இருந்து குழுவாக ஜெபிக்கலாம். உங்கள் திருச்சபையின் மற்றவர்களுடனும், பிரார்த்தனை வலையமைப்புடனும் இணைந்து ஜெபக்கவும் உங்களை ஊக்குவிக்கிறோம்.

 

MUFWஇல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை மணி 6 – 8 வரை அனுசரிக்கும் கூட்டுறவுப் பிரார்த்தனையில் பின் இணைப்பில் (http://tiny.cc/mufw40days) எங்களுடன் சேருங்கள்.

ஜெப குறிப்புகள்

பின்வரும் ஜெப குறிப்புகள் NECF இன் 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம் 2021 கையேட்டில் இருந்து எடுக்கப்பட்டது:

உலகளாவிய தொற்றுநோய் தாக்கத்தில் உள்ள நாம், குணமடைய வேண்டிய உலகில் வாழ்கிறோம் என்பது மட்டுமின்றி, நம் இதயங்களும் ஆபத்தில் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால், நம் உலகத்தைப் பாதித்து, மனித இதயத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளுக்குக் கர்த்தர் பதில் வைத்திருக்கிறார். 2 நாளாகமம் 7:14 உள்ளவாறுஅவருடைய மக்கள் ஜெபிக்கும்போது அவருடைய பரிகாரம் தொடங்குகிறது.

 

என் மக்கள் என் நாமத்தால் அழைத்தால்

 

பரலோகத் தகப்பனே, நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்; அரச ஆசாரியத்துவம், பரிசுத்த தேசம், உங்களுக்குச் சொந்தமான மக்கள் என்பதற்கு நன்றி கூறுகிறோம், ஏனென்றால், மழை பெய்யாதபடி வானங்களை மூடும்போதும்; ​​வெட்டுக்கிளிகளை நிலத்தை விழுங்க கட்டளையிடும் போதும், உமது மக்களிடையே கொள்ளை நோயை அனுப்பும்போதும், உம் மக்களான நாங்கள் எங்களைத் தாழ்த்தி, ஜெபம் செய்து, உங்கள் முகத்தைத் தேடி, எங்கள் பொல்லாத வழிகளிலிருந்து விலகி, உம்முடைய நாமத்தில் அழைக்கும்போது, நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு,எங்கள் பாவத்தை மன்னித்து; எங்கள் தேசத்தைக் குணமாக்குவீர் என்று நீங்கள் உறுதியளிக்கிறீர்கள். (2 நாளாகமம் 7: 13-14).

 

தங்களைத் தாழ்த்திக் கொள்வார்கள்

 

பிதாவே, உடைந்த ஆவி, தளர்ந்த மனத்துடன் நாங்கள் பாவம் செய்தோம் என்பதைத் தாழ்மையாய்ஒப்புக்கொள்கிறோம் (சங்கீதம் 51:17). அடிப்பணிந்த முழங்கால்களில் நாங்கள் உங்கள் முன் வருகிறோம். எங்கள் சொந்த பலத்தின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு நிற்பதை மறுக்க விரும்புகிறோம். நாங்கள் உங்கள் ஆவியின் ஆற்றலையும் உங்கள் குரலின் வழி நடத்துதலையும் மட்டுமே சார்ந்து இருக்க விரும்புகிறோம். ஆண்டவரே, உமது விருப்பத்திற்கு முழுமையாக எங்களைத் தாழ்த்தி அடிபணிந்து ஒப்புக் கொடுக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் முழுக்கட்டுப்பாட்டையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறோம். எங்கள் விருப்பங்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம், இதன் மூலம்நாங்கள் கிறிஸ்துவைப் போல் மாறி, உமக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கிறோம். தாழ்த்தப்பட்டோரின் ஆவியையும், இருதயத்தையும் நீங்கள் உயிர்ப்பிப்பீர்கள் (ஏசாயா 57:15) ஏனென்றால், நீங்கள் பெருமைகளை எதிர்க்கிறீர்கள், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையை அருளுகின்றீர்கள் (யாக்கோபு 4: 6).

 

பிரார்த்தனை

 

கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் ஜெபிக்கவும், எந்தச் சூழ்நிலையிலும்  நம்பிக்கையை       இழக்கவோ நிலைமை மோசமாகத் தோன்றினாலும் விட்டுவிடவோ கூடாது என்று நீங்கள் எங்களுக்குக் கற்பித்து இருக்கிறீர்கள். எங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நம்பிக்கை அற்றதாகத் தோன்றினாலும், இடைவிடாமல் ஜெபத்தில் நிலைத்திருக்கவும் வெற்றி பெறவும் எங்களுக்கு உதவுங்கள். ஏனெனில், இது விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் எழுப்புதலில் புத்துயிர் பெறுவதற்கும் முக்கியமாகும். எங்கள் அயர்ந்த உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பி, ஆன்மீக ரீதியாகவும், சரீர ரீதியாகவும் எங்களைப் பலப்படுத்துங்கள், இதனால், நாங்கள் சோதனையில் விழாதபடி பார்த்துக் கொள்ளவும் ஜெபிக்கவும் விழிப்புடன் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத கூக்குரல்களுடன் எங்களுக்காகப் பரிந்து பேசுகிறார், ஆனால், ஆவியானவர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து பேசுகிறார். உம்முடைய பிரசன்னத்திலும் ஆற்றலிலும் ஒரு புதிய வழியில் எங்களை நிரப்புவதன் மூலம் எங்களை உயிர்ப்பிக்க ஆண்டவரே எங்களுக்கு மிகவும் தேவை, ஏனென்றால், உம் முன்னிலையில் ஆனந்தமும் இன்பமும் என்றென்றும் இருக்கிறது.

 

என் முகத்தைத் தேடுங்கள்

 

உங்கள் முகத்தைத் தேட நாங்கள் அழைக்கப்பட்டு இருக்கிறோம். எங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முதலில் உதவியையும் நோக்கத்தையும் தேடுவதை நிறுத்த சொல்லிழிருக்கிறீர். திருச்சபையோ உலகவழிகளையும் கருத்துகளைத் தேடவோ; கல்வி, அரசியல் அல்லது அறிவியலின் கண்டுபிடிப்புகள் முதலியவற்றிற்காக அழைக்கப்படவில்லை. நாங்கள் கடவுளின் முகத்தைத் தேட அழைக்கப்பட்டு இருக்கிறோம்! ஆண்டவரே, எங்களுக்கு அதற்கான வைராக்கியத்தையும் தாகத்தையும் கொடுங்கள்.

 

 

யாக்கோப்பைப் போல நாங்கள் எழுப்புதல் பெற்று எங்கள் திருச்சபை மீட்கப்படும் வரை ஜெப போராட்டத்தைக் கைவிடாததற்கும் தயாராக இருக்கிறோம். நீதியின்மேல்  பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்பதால் நாங்கள் இரவும் பகலும் உங்களைப் பின்தொடர்வோம் (மத்தேயு 5: 6). எங்கள் கடினமான இதய நிலத்தைப் பண்படுத்த உழுங்கள், இப்பொழுதே உம்மைத் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது, நீர்வந்து எங்கள் மீது நீதியைப் பொழியவும் (ஓசியா 10:12). ஆண்டவரே,  நாங்கள் உங்களை முழு இருதயத்தோடு தேடுகையில் உங்களைக் கண்டு அடைவோம். (எரேமியா 29:13). பிறகு, நீங்கள் எங்களைத் தொடர்ந்து வழிநடத்துவீர்கள், நாங்கள் வறட்சியான நிலையில் இருக்கும்போது எங்களுக்குத் தண்ணீர் கொடுத்து எங்கள் பலத்தை மீட்டெடுப்பீர்கள். நாம் எப்போதும் தண்ணீர் பாயும் தோட்டத்தைப் போலவும், எப்போதும் வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்போம் (ஏசாயா 58:11).

 

எங்களின் பொல்லாத வழிகளில் இருந்து விலகுங்கள்

 

பிதாவே, நான் என் இருதயத்தில் பாவத்தை நேசித்திருந்தால், கர்த்தர் என் ஜெபங்களுக்குச் செவி கொடுக்கமாட்டார்.(சங்கீதம் 66:18). என் பொல்லாத வழிகளிலிருந்து நான் திரும்பும் வரை (நீங்கள் செய்த பாவங்களின் மனந்திரும்புதல்) எழுப்புதல் என் வாழ்க்கையில் ஒருபோதும் நடக்காது என்பதை நான் அறிவேன். நாங்கள் தெய்வபக்தியின் ஒரு வடிவத்தைக் கொண்டிருப்பதால், அதன் ஆற்றலை மறுத்ததலிருந்து மனந்திரும்புகிறோம். நம்மைத் தீட்டுப்படுத்தி, நம்முடைய ஜெபங்களுக்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றிலிருந்தும் நாம் மனம் திரும்புவோம். கடவுளை விட நமக்கு நன்றாகத் தெரியும் என்ற சுய நம்பிக்கையிலிருந்து மனம் திரும்புவோம் – நாம் கிறிஸ்துவின் மனத்தையும் ஞானத்தையும் விட நம் மனத்தையும் புத்தியையும் நம்புகிறோம். நாம் நம்மை நேசிப்பது போல் மற்றவர்களை நேசிப்பதற்குப் பதிலாக  ஒற்றுமையின்மை மற்றும் பிளவுகளிலிருந்து திரும்புகிறோம்.

 

ஆண்டவரே, நாங்கள் உங்களிடம் மீண்டும் திரும்ப விரும்புகிறோம், இதனால், நீங்கள் எங்களிடம் திரும்புவீர்கள். நாங்கள் எங்களைத் தாழ்த்தி, பிரார்த்தனை செய்து உங்கள் முகத்தைத் தேடி, எங்கள் தீய வழிகளில் இருந்து திரும்பும்போது, ​​நீங்கள் பரலோகத்தில்  இருந்து எங்களுக்குச் செவி கொடுப்பீர். எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் வாழ்க்கை, குடும்பங்கள், திருச்சபைகள், சமூகங்கள் மற்றும் தேசத்தைக் குணமாக்குவீர்கள். இறைவன் பரலோகத்தைத் திறந்து, எங்கள் தேசத்தில் உங்கள் பரிசுத்த ஆவியின் வலிமையான வெளிப்பாடு இருக்கட்டும்; ஒரு பெரிய எழுப்புதல் ஏற்படும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.

வாரம் 25 – நடவடிக்கைகான அழைப்பு