ஆபத்து அல்லது நெருக்கடி நிகழ்வுக்கான பிரார்த்தனை

 

இந்த வாரம்,  திறப்பிலே நின்று கீழ்க்கண்ட குறிப்புகளுக்காக ஜெபிக்க சிறிது நேரம் ஒதுக்குவீர்களா?

 

  1. புத்ராஜெயா – மோசமாகிக் கொண்டிருக்கிற தொற்றுநோயைக் கையாள ஞானத்துக்காகவும், நமது பிரதமரின் ஆரோக்கியத்துக்காகவும்பா
  2. ராளுமன்றம் – அனைவரின் நல்வாழ்விற்கும் முன்னுரிமை அளித்தல், ஊழலைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல் , அனைத்து வகையான இனவெறிக்கும் முற்றுப்புள்ளி வைப்பது
  3. ஏழைகள் மற்றும் கஷ்டப்படுபவர்கள் – இந்த தற்போதைய பொருளாதாரக் குறைவில் துன்பப்படுகிறவர்களுக்காக, அவர்களின் கஷ்டத்தைத் தணிக்க சமுதாயம் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக.
  4. போதகர்கள், ஊழியத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் – இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு விசேஷித்த பாதுகாப்பு தேவை

 

மலேசியாவுக்கான ஆசீர்வாத ஜெபம்

 

பிதாவே ஆண்டவரே, எங்கள் தேசம் நெருக்கடியான காலத்தைக் கடந்து செல்லும்போது, ​​எங்கள் தேசத்தை ஆசீர்வதிப்பதற்காக நாங்கள் ஒரு மனப்பட்டு ஒன்றாக நிற்கிறோம், இதன்வழி சிலுவையிலிருந்து வரும் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஒவ்வொரு சாபத்தின் சக்தியையும் உடைக்கும்.

 

.புத்ராஜயா

  • ஆண்டவரே, நாங்கள் உம்மை ஆசீர்வதிக்கிறோம், உங்கள் பிரசனத்தை எங்கள் தேசத்தில் வரவேற்கிறோம். மலேசியாவின் அனைத்து எதிரிகளும் சிதறடிக்கப்பட்டு, கர்த்தாவே உமது முன்னிலையில் மலைகள் மெழுகு போல உருகட்டும்.

 

  • ஆண்டவரே குழப்பம், சீர்கேடு மற்றும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கும் இருளின் சக்திகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக நிற்கும்போது எங்களை ஆசீர்வதியுங்கள்.

 

  • சமாதான தேவனான இயேசு எங்கள் மலேசியா தேசத்தில் அமைதி, ஒழுங்கு மற்றும் உறுதியான நிலைபாடுஅமைய ஆசீர்வதிக்கிறோம்.

 

தொற்றுநோய்

  • இயேசுவின் நாமத்தினாலே, எங்கள் தேசத்திலிருக்கும் மரணம் மற்றும் நோயின் சாபத்தைக் கண்டிக்கிறோம்;  ஆண்டவரே உங்கள் கருணையினால் மலேசியாவைக் கோவிட் 19 தொற்றிலிருந்து விடுவிக்கவும்.

 

  • ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டால் எங்களை ஆசீர்வதியுங்கள், இதன் மூலம் நோயுற்றவர்களுக்கும், மனச்சோர்வு அடைந்தவர்களுக்கும், மரணத்தின் விளிம்பில் இருக்கும் நபர்களுக்காகவும் ஜெபிக்க நாங்கள் ஒரு மனப்பட்டு நிற்கும்போது உமது ​​குணப்படுத்துதல், விடுதலை மற்றும் அற்புதங்களைக் காண்போம்.

 

  • கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி பணியாளர்கள் மன, உடல் மற்றும் சரீரவலிமையுடன் இருக்க ஆசீர்வதியுங்கள். அவர்களின் குடும்பங்களையும் மலேசிய சுகாதார அமைச்சையும்(MOH) அவர்களுக்கு மிகவும் தேவையான ஞானம், பொருள்கள், நெருக்கடியான சூழ்நிலையைச் சரியாகநிர்வகிக்கும் ஆற்றல் முதலியவற்றால் ஆசிர்வதியுங்கள்.

 

பாராளுமன்றம்

  • இப்போதே அனைத்து அரசியல் தலைவர்களை அவர்களின் மனத்தை மழுங்கடித்து, அவர்களின் இதயங்களைச் சிதைக்கும் சாபங்களிலிருந்து விடுவிக்க ஆசீர்வதிக்கிறோம்.

 

  • அவர்கள் கடவுளுடைய பயத்தால் நிரப்பப்பட ஆசீர்வதிக்கிறோம். அவர்கள் இனவெறி, தீவிரவாதம், அதிகாரஆசை ஆகியவற்றை நிராகரிக்கும் ஞானத்தால் நிரப்பப்படவும் ஆசிர்வதியும்.
  • அவர்கள் மக்களுக்கு நல்லது என்று கருதும் காரியங்களுக்குப் பொதுவான விருப்பத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்.

 

ஏழ்மை

  • ஏழைகளுக்கு உதவும் ஒவ்வொரு சமூக முயற்சியையும் ஆசீர்வதியுங்கள். இந்தக் காலம் இன, பொருளாதார மற்றும் சமூக பிளவுகளின் சுவர்களை உடைக்கட்டும்.

 

  • ஏழைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் இறக்கும் நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் எழும்போது ஆவிக்குரிய உத்வேகத்துடன் அனைத்துத் திருச்சபைகளை ஆசீர்வதியுங்கள்.

 

  • தயவுசெய்து ஒவ்வொரு செயலையும் ஆசீர்வதியுங்கள். இதனால் திருச்சபை ஒரு மலையின் மீது உள்ள நகரமாகவும் அதன் ஒளி மறைக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

 

  • தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதால் திருச்சபை இலக்குகளை அடைய ஆற்றல்மிக்க ஒற்றுமை ஆவியினைப் பெறஆசீர்வதியுங்கள்.

 

 

போதகர் & திருச்சபை மூப்பர்கள்

  • எங்கள் திருச்சபைகள் அன்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதி ஆகியவற்றால் நிரம்பி வழிய ஆசிர்வதிக்கிறோம்.

 

  • எங்கள் போதகர்கள் மற்றும் தலைமைத்துத்தில் உள்ள அனைவரையும், அவர்களின் குடும்பங்கள், வீடுகள் மற்றும் அவர்களின் ஊழியம் முதலியவற்றின் மீது உங்கள் பாதுகாப்புத் தீ ஜெப அரண் மூலம் பெற ஆசீர்வதிக்கிறோம்.

 

  • எங்களுடைய போதகர்களும் தலைவர்களும் உன்னதமானவரின் தங்குமிடத்திலும் சர்வவல்லவரின் நிழலிலும் குடியிருக்கட்டும்.

 

  • அவர்களுக்கு எந்தத் தீங்கும் வராது என்றும், எந்தப் பேரழிவும் அவர்களுக்கு அருகில் வராது என்றும் நாங்கள் அறிவிக்கிறோம்.

 

 

  • நீங்கள் அவர்களின் பலமாகவும், கேடயமாகவும், வலுவான கோபுரமாகவும் இருப்பீர்கள்.

 

இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென்.

 

சங்கீதம் 75 அதிகாரம்

1. உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.

2. நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.

3. பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)

4. வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

5. உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

6. கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.

7. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

8. கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

9. நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

10. துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

 

வாரம் 21&22 – நடவடிக்கைகான அழைப்பு: 21 நாள்கள் பாதுகாப்பு ஜெபம்